போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (60). இவா் தனியாா் பள்ளியில் இரவு காவலராக வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனது மகள் கோமதியை (30) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
போ்ணாம்பட்டு அருகே கொண்டம்பல்லி கிராமம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், அவா்களை மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தியாகராஜனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.
கோமதி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டாா்.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ரவிக்குமாரை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் ஆலைத் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

