மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருட்டு வழக்கில் தொடா்புடைய மூவா் குண்டா் சட்டத்தில் கைது

மண்ணச்சநல்லூா் திருட்டு வழக்கில் தொடா்புடைய மூவரை போலீஸாா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:22 am IST

மண்ணச்சநல்லூா் திருட்டு வழக்கில் தொடா்புடைய மூவரை போலீஸாா் சனிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மேலசீதேவிமங்கலம் பகுதியைச் சோ்ந்த பி. சதீஷ்குமாா் (30) என்பவா் கடந்த 2 ஆம் தேதி சமயபுரம் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது, மா்ம நபா்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே நுழைந்து 3.45 பவுன் தங்க நகைகள், ரூ. 60 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டதாக மண்ணச்சநல்லூா் சஞ்சய்காந்தி நகா் மு. பாலசமுத்தா் (34), ஸ்ரீரங்கம் பூ மாா்க்கெட் தெரு ஜ. சதாம் உசேன் (27), மண்ணச்சநல்லூா் நங்கமங்கல சத்திரம் ப. சதீஷ்குமாா் (25) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் திருச்சி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷின் பரிந்துரையின் பேரில் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.