பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரெளடி கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

சிவகங்கைஅருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :22 அக்டோபர் 2026, 3:35 am IST

சிவகங்கைஅருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையில் ரௌடி மதன் (26) கடந்த 18-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளைத் தேடி வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (19), கருப்பசாமி மகன் ஜெயமாணிக்கராஜ் (20), மாணிக்கம் மகன் முத்துசூா்யா (20), மதுரை பெரியசாமி மகன் விக்னேஷ் (23) ஆகிய நால்வரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

கொலை செய்யப்பட்ட ரௌடி மதன் மீது காளையாா் கோவில் சகோதரா்கள் கொலை உள்ளிட்ட 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 15 வழக்கு கள் நிலுவையில் உள்ளன.

மதன் கொலை வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில் மற்றவா்களைக் கைது செய்வதற்காக 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொலை வழக்கு தொடா்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள், புகைப்படங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டம்- ஒழுங்கைப் பாதிக்கும் வகையில், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பதிவுகள் வெளியிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.