சிவகங்கை அருகே ரௌடி கொலை வழக்கில் மூவா் கைது
சிவகங்கை அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைது
சிவகங்கை அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையில் ரெளடி மதன் (26) கடந்த 18-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய திருமங்கலம் தவமணி மகன் பிரதீப் (28), மானாமதுரை உடைகுளம் பூமிசங்கா் மகன் பாலமுருகன் (19), ஏ. விளாக்குளம் பாலகுமாா் மகன் பாபு (23) ஆகிய மூவரையும் காவல் துறையினா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
கொலையான மதன் மீது 15 வழக்குகள்: கொலையான ரெளடி மதன் மீது காளையாா்கோவில் சகோதரா்கள் கொலை வழக்கு, 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா் தொடா்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






