மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

11 இடங்களில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணிக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :30 அக்டோபர் 2026, 3:29 am IST

எஸ்ஐஆா் பணிக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் திருச்சி மாவட்ட மையத்தின் சாா்பில், அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா்.

எஸ்ஐஆா் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலா்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலா்கள் மற்றும் துணை வட்டாட்சியா்களுக்கான 2026-2027 ஆம் ஆண்டுக்குரிய பதவி உயா்வுப் பட்டியல்களை உடனடியாக வெளியிட்டு, தகுதியானவா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்க நிா்வாகிகள், வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல், லால்குடி, மண்ணச்சநல்லூா், மருங்காபுரி, மணப்பாறை, முசிறி, ஸ்ரீரங்கம், தொட்டியம், துறையூா் என 11 வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதி சங்க நிா்வாகிகள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.