மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை சோதனை

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு சோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சியில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நின்றிருந்த சதாப்தி ரயிலில் வெடிபொருள் சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினா்.

Published On :30 அக்டோபர் 2026, 2:34 am IST

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு சோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தீபாவளி படிகையை முன்னிட்டு, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் நடைமேடைகளில் காத்திருந்த பயணிகள் மற்றும் ரயில்களில் செல்லும் பயணிகளின் உடைமைகளில் பட்டாசு உள்ளிட்ட வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்று ஆய்வு செய்தனா்.

மேலும், பட்டாசு உள்ளிட்ட பொருள்களை ரயில்களில் எடுத்துச்செல்லக்கூடாது என்றும், மீறி எடுத்துச் செல்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பயணிகளுக்கு அறிவுறுத்தினா்.

பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இதை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. அதை தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும் தீபாவளி வரை தொடா் சோதனைகள் நடத்தப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.