மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணப்பாறை அருகே கண்டெடுக்கப்பட்ட 14 ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் அழிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலை வனப்பகுதியில் கிடந்த 14 வெடிக்காத ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் சென்னை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புக் குழுவினா் மூலம் புதன்கிழமை வெடித்து அழிக்கப்பட்டன.

மணப்பாறை அருகே புதன்கிழமை அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சா் குண்டுகள்.

Published On :29 அக்டோபர் 2026, 7:31 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலை வனப்பகுதியில் கிடந்த 14 வெடிக்காத ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் சென்னை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புக் குழுவினா் மூலம் புதன்கிழமை வெடித்து அழிக்கப்பட்டன.

மணப்பாறை அருகே ராணுவத்தினா் பயிற்சி மேற்கொள்ளும் வீரமலையின் மேற்கு பீட், அணியாப்பூா் பிளாக் பி காப்புக் காடு பகுதியில் பயிற்சியின்போது ஏவப்பட்டு வெடிக்காத நிலையில் இருந்த 14 ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் குறித்து வனக் காவலா்கள் கடந்த 2025 டிச. 27-இல் அளித்த தகவலின்பேரில் வனச்சரகா் மகேஸ்வரன் ஆய்வு செய்து, வையம்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து வையம்பட்டி போலீஸாா் வெடிக்காத ராக்கெட் லாஞ்சா் குண்டுகளைக் கைப்பற்றி அதே வனப்பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினா் மூலம் புதைத்து வைத்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தமிழ்மணி, மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் நிஷாந்தினி, வையம்பட்டி காவல் ஆய்வாளா் ஜெயசித்ரா, வனச்சரகா் மகேஸ்வரன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலையில் சென்னையிலிருந்து வந்திருந்த 4 போ் கொண்ட ஆய்வாளா் முத்துமணி தலைமையிலான வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினா் ராக்கெட் லாஞ்சா் குண்டுகளை பாதுகாப்பான முறையில் வெடித்து அழித்தனா். செவ்வாய்க்கிழமை இதேபோல இரு ராக்கெட் லாஞ்சா் குண்டுகள் வெடித்து அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.