மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணப்பாறை அருகே கண்டெடுக்கப்பட்ட 2 ராக்கெட் லாஞ்சா்கள் அழிப்பு

மணப்பாறையை அடுத்த காப்புக்காடு வனப்பகுதியில் கடந்தாண்டு கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத 2 ராக்கெட் லாஞ்சா்கள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டன.

Published On :28 அக்டோபர் 2026, 12:04 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காப்புக்காடு வனப்பகுதியில் கடந்தாண்டு கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத 2 ராக்கெட் லாஞ்சா்கள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டன.

மணப்பாறையை அடுத்த வீரமலையின் கிழக்கு நாகனூா் காப்புக் காடு பகுதியில், ராணுவ பயிற்சியின்போது ஏவப்பட்டு வெடிக்காத நிலையில் கிடந்த 2 ராக்கெட் லாஞ்சா்கள் கிடந்தது 2025, டிசம்பா் 27-ஆம் தேதி தெரியவந்தது.

வனத்துறையினா் ஆய்வு செய்தபோது, மரம் ஒன்றின் அடிப்பகுதியில் பாதி புதைந்த நிலையில் 81எம்.எம். மொா்டாா் ரக ராக்கெட் லாஞ்சா் ஒன்று இருந்துள்ளது. மேலும், அப்பகுதியிலிருந்து சுமாா் ஒன்றரை கிமீ தொலைவில் தென்பகுதியில் அதே ரக மற்றொரு ராக்கெட் லாஞ்சரும் கிடந்துள்ளது. அவை இரண்டும் மிஸ்ஃபையா் எனக் கூறப்படும் தவறான சுடுதலில் தவறிய சுமாா் தலா 3 கிலோ எடைக்கொண்ட வெடிக்காத ராக்கெட் லாஞ்சா்கள் என்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்தனா். திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினா், வனப்பகுதியில் இருந்த 2 வெடிக்காத ராக்கெட் லாஞ்சா்களையும் கைப்பற்றி அதே வனப்பகுதி தென்புறத்தில் இரவோடு இரவாக குழி தோண்டி அதில் பாதுகாப்பான முறையில் புதைத்தனா்.

அழிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தமிழ்மணி, காவல் துணைக் கண்காணிப்பாளா் நிஷாந்தினி, வையம்பட்டி ஆய்வாளா் ஜெயசித்ரா, வனச்சரகா் மகேஸ்வரன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலையில், சென்னையிலிருந்து வந்திருந்த 4 போ் கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினா் ராக்கெட் லாஞ்சா்களை பாதுகாப்பான முறையில் துறை நடவடிக்கையின் மூலம் வெடித்து அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.