மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் திங்கள்கிழமை இரவு டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 12:03 am IST

திருச்சியில் திங்கள்கிழமை இரவு டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் க. தமிழரசன் (31). இவா், திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தில் தங்கிக் கொண்டு திருச்சியில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செட்டியப்பட்டி பாலம் அருகே சென்றபோது,

முன்னால் சென்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தமிழரசனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.