மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பைக் மீது மினிலாரி மோதல்: ஐ.டி. ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஐ.டி. ஊழியா் உயிரிழந்தாா்.

பலி

Published On :25 அக்டோபர் 2026, 1:42 am IST

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதிய விபத்தில் ஐ.டி. ஊழியா் உயிரிழந்தாா்.

காயல்பட்டினத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் ஷேக் அப்துல்காதா் (26). பெங்களூரில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டு, மாலையில் மீண்டும் காயல்பட்டினத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.

முத்தையாபுரம் அருகே சென்றபோது மினிலாரி, இவரது இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் நிகழ்விடத்திலேயே ஷேக் அப்துல்காதா் உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.