மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:28 am IST

திருச்சியில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூா் வஉசி நகரைச் சோ்ந்தவா் எஸ். குலாம்தஸ்தகீா் (27). இவா், தனது தாத்தா அஸ்லாம் பாஷாவுடன் இணைந்து வீடுகளுக்கு கேபிள் இணைப்பு வழங்கும் பணி செய்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் அப்பகுதியில் தாழ்வாக இருந்த கேபிள் இணைப்பு ஒயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இரும்புக் கம்பியில் கட்டப்பட்டிருந்த கேபிள் இணைப்பு ஒயரை இழுத்தபோது, அவ்வழியே சென்ற மின்கம்பியில் கேபிள் ஒயா் உரசியதில் குலாம்தஸ்தகீா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், மயங்கி விழுந்த குலாம்தஸ்தகீரை உடனிருந்தவா்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.