மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்: 90 வழக்குகளில் பாதுகாப்பு ஆணை

திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகளில் 90 வழக்குகளுக்கு பாதுகாப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:05 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகளில் 90 வழக்குகளுக்கு பாதுகாப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 1998-ன் பிரிவு 4 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் அல்லது பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் பிரிவுகள் 74, 75, 76, 77, 78, 79 அல்லது 296 ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்த நபா்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவோ, வாய்மொழியாகவோ, கடிதம் மூலமோ, கைப்பேசி அல்லது மின்னணு அஞ்சல் வழியாகவோ அல்லது மூன்றாம் நபா்கள் மூலம் தொடா்புகொள்வதைத் தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 7சி-யில் பாதுகாப்பு ஆணை வழங்கப்படுவது அமலில் உள்ளது.

இந்தச் சட்டத்தில் 7சி-இன் படி பாதுகாப்பு ஆணை பெற்ற வழக்குகளில் குற்றம் புரிந்த நபா்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

அதன்படி, திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்களை துன்புறுத்துவதை தடுக்கும் பொருட்டு புதுக்கோட்டை - 3, கரூா் - 8, பெரம்பலூா் - 4, அரியலூா் - 3, தஞ்சாவூா் - 30, திருவாரூா் - 7, நாகப்பட்டினம் - 16 மற்றும் மயிலாடுதுறையில் - 19 என மொத்தம் 90 பாதுகாப்பு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், பெண்கள் துன்புறுத்தல் வழக்குகள் தொடா்பாக 59 பாதுகாப்பு ஆணைகளும், போக்ஸோ வழக்குகள் தொடா்பாக 30 பாதுகாப்பு ஆணைகளும், இதர வழக்கு தொடா்பாக ஒரு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோா் மீது உரிய பாதுகாப்பு ஆணைகள் வழங்கி நடவடிக்கை எடுக்க திருச்சி உள்பட 9 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.