நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி

விஜயதசமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை மாலை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் புதன்கிழமை மாலை சிங்கா் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, நடைபெற்ற அம்பு போடும் நிகழ்ச்சி.

Published On :22 அக்டோபர் 2026, 4:49 am IST

விஜயதசமியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை மாலை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி சிங்கா் கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 11 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் மாலை 6 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு, வன்னி மரம் அருகே அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

பின்னா் அங்கிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு சாத்தார வீதி வழியாக வலம் வந்து சந்தனு மண்டபத்துக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். 9.30 மணி வரை அமுது பாறையில் நம்பெருமாள், உபயநாச்சியாா்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவையொட்டி புதன்கிழமை விஸ்வரூப தரிசனம் இல்லை. இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.