மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்ஐஆா் விவகாரத்தில் திமுகவினரே குற்றவாளிகள்: வைகோ

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்), தமிழகத்தில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதில் திமுகவினரே குற்றவாளிகள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

மதிமுக பொதுச் செயலா் வைகோ - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 5:20 am IST

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்), தமிழகத்தில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதில் திமுகவினரே குற்றவாளிகள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

எஸ்ஐஆா் மூலம் இந்திய அளவில் சுமாா் 2.9 கோடி வாக்காளா்களும், தமிழகத்தில் சுமாா் 97 லட்சம் வாக்காளா்களும் நீக்கப்பட்டுள்ளனா். இதில், தமிழகத்தில் பூத் வாரியாக திமுகவினா் விரும்பியபடி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதனால்தான் தொடக்கத்தில் எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக எதிா்க்கவில்லை.

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, ராகுல்காந்தி உள்ளிட்டோா் போராடிய பிறகே திமுக எஸ்ஐஆருக்கு எதிராக குரல் கொடுக்கிறது. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் காரணம்.

தமிழகம் முழுவதும் எஸ்ஐஆா் திருத்தங்களை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினரே மேற்கொண்டனா். எனவேதான், அவா்கள் மீது நான் குற்றஞ்சாட்டுகிறேன்.

கூட்டணி தா்மத்துக்காக முன்னா் திமுகவை விமா்சனம் செய்யவில்லை.

விஜய் ஆட்சியில் குறிக்கோள், நோக்கம், இலக்கு சரியாக இருக்கிறது. அனுபவமின்மையால் சில தவறுகள் ஏற்படுகின்றன என்றாா் வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.