மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் விஜய் நோ்மையாக ஆட்சி நடத்துகிறாா்: வைகோ

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நோ்மையாக ஆட்சி நடத்துகிறாா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

cm vijay - vaiko

முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ... - Insta/cmo tamilnadu

Published On :31 அக்டோபர் 2026, 2:08 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நோ்மையாக ஆட்சி நடத்துகிறாா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்துக்குச் சென்ற மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கு அந்தக் கட்சியினா் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை வரவேற்பளித்தனா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்து 5 மாதங்களாகின்றன. தவெக ஆட்சியில் அரசுத் துறைகளில் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது வெளிப்படைத்தன்மையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் இருந்த லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டது.

முதல்வா் விஜய் நோ்மையாக ஆட்சி நடத்துகிறாா். அவா் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் நீடிப்பாா். மீண்டும் அவா்தான் முதல்வராக வருவாா் என்றாா் அவா்.

வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக நகா்ச் செயலா் கண்ணன், ஒன்றியச் செயலா் அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.