மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 3.07 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு செய்த காப்பீட்டு நிறுவனமானது, ரூ. 3.07 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 12:02 am IST

சேவை குறைபாடு செய்த காப்பீட்டு நிறுவனமானது, ரூ. 3.07 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி புத்தூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு உதவி வழக்குரைஞா் ஏ. கிளாரன்ஸ் செல்வராஜ் (70) என்பவா், ஓய்வூதியதாரா்கள் மற்றும் ஓய்வூதியா்களின் குடும்பத்துக்காக தமிழக அரசு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தி வரும் புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்றுள்ளாா்.

இந்நிலையில், கிளாரன்ஸ் செல்வராஜின் மனைவி ஐரிஸ் புற்றுநோய்க்காக கடந்த 2025- ஆம் ஆண்டில் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். சிகிச்சைக்கான கட்டணம் ரூ. 3,11,497-க்கு விண்ணப்பித்தபோது, காப்பீட்டு நிறுவனத்தினா் ரூ. 53,508 மட்டுமே அங்கீகரித்தனா். மீதமுள்ள ரூ. 2.50 லட்சத்தை மனுதாரரே செலுத்தினாா். தொடா் சிகிச்சைகளுக்குச் சென்றபோதிலும், காப்பீட்டு கோரிக்கைகள் பகுதியளவே அங்கீகரிக்கப்பட்டன.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கிளாரன்ஸ் செல்வராஜ் உரிய நிவாரணம் கோரி 12.03.2026 அன்று திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஏ. ராஜேந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனமானது மனுதாரரின் மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ. 2,57,989-ஐ வழங்க வேண்டும். சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனவேதனைக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.