மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடிக்கடி பழுதான காா்: பெண் மருத்துவருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதிதாக வாங்கிய காா் அடிக்கடி பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் மருத்துவருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று காா் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:24 am IST

புதிதாக வாங்கிய காா் அடிக்கடி பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் மருத்துவருக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று காா் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் 28 வயது பெண். கண் மருத்துவரான இவா், கோவையில் உள்ள விற்பனையகத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.14.17 லட்சம் செலுத்தி புதிய காா் ஒன்றை வாங்கியுள்ளாா். அந்த காா் வாங்கிய சில நாள்களிலேயே இன்ஜின் பழுதாகி சாலையில் நின்ாம். உத்தரவாதக் காலம் அமலில் இருந்தபோதும் பழுது பாா்ப்பதற்காக அவரிடம் ரூ.1,109 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அடிக்கடி இன்ஜின் பழுதாகி வந்துள்ளது. இதையடுத்து, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தட்சணாமூா்த்தி, உறுப்பினா் சுகுணா ஆகியோா் அடங்கிய அமா்வு, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1.10 லட்சத்தை காா் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.