மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் மாநில செஸ் போட்டி

திருச்சி மாவட்டம், சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 1ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவா் மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில செஸ் போட்டியில் வென்றோா்.

Published On :8 அக்டோபர் 2026, 1:49 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்  1ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவா் மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது.

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மாணவா் நலப் பிரிவு மற்றும் உடற்கல்வி இயக்குநரகத்தின் ஆதரவுடன் யங்ஸ்டா்ஸ் செஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற போட்டியில்  7,9,13, 17, மற்றும் 25 வயதுக்குட்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இளம் செஸ் வீரா்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

தொடக்க விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாணவா் நலப்பிரிவு டீன் வ. ராஜீ தலைமை வகித்தாா். யங்ஸ்டா்ஸ் சிஸ் அகாதெமி நிறுவனரும், சா்வதேச செஸ் நடுவருமான எம். சுந்தா் முன்னிலை வகித்தாா்.

நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் டாக்டா் வ. ராஜூ, திருச்சி மாவட்ட செஸ் சங்கத் துணைத் தலைவா் என். வெங்கட்ராமன், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் கே. தா்மா், ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பல்கலைக்கழக செஸ் கிளப் ஒருங்கிணைப்பாளா் பி. சந்திரமோகன், துணை உடற்கல்வி இயக்குநா் சி. பாலாஜி, மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநா்கள் செய்தனா் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.