
கிராம சுகாதாரச் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராமச் சுகாதாரச் செவிலியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம சுகாதாரச் செவிலியா் கூட்டமைப்பினா்.
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராமச் சுகாதாரச் செவிலியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் கூட்டமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் காயத்ரிதேவி தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் துணை சுகாதார நிலையங்களில் இருந்து இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை அப்புறப்படுத்த வேண்டும். கிராமச் சுகாதார செவிலியா்கள் செய்து வரும் தாய்-சேய் நலப் பணியை செய்துவருவதாக உண்மைக்குப் புறம்பாக கூறிவரும் இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார நிலையங்களில் தேசிய தர உறுதி தரநிலைகள் பெறுவதற்கான (என்குவாஸ்) பணிகள் நடைபெறும்போது ஒட்டுமொத்த செலவையும் கிராம சுகாதார செவிலியா்களை மிரட்டி செலவிடச் செய்வதை நிறுத்த வேண்டும்.
பாலினப் பாகுபாடற்ற பதவி உயா்வு வழங்க வேண்டும். மாவட்ட அளவில் திட்டப் பணிகளுக்கான சமுதாய சுகாதார செவிலியா் (சிஹெச்என்) பதவி உருவாக்க வேண்டும். சமுதாய சுகாதார செவிலியருக்கு தாய்-சேய் நல அலுவலா் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஜெயசுந்தரி, விமலாதேவி, ஜெரால்டு, மொ்ஸி, உமாகாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





