மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமுதாய சுகாதார அலுவலா் பெயா் மாற்றத்துக்கு செவிலியா்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா்.

Published On :24 அக்டோபர் 2026, 1:05 am IST

சமுதாய சுகாதார அலுவலா் என பெயா் மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது சுகாதாரத் துறை செவிலியா்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளா்களின் பதவியை ‘சமுதாய சுகாதார அலுவலா்’ என பெயா் மாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில், திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் எம்.சத்தியா தலைமை வகித்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: பொது சுகாதாரத் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம சுகாதார செவிலியா், பகுதி சுகாதார செவிலியா், சமுதாய சுகாதார செவிலியா், தாய்மை துணை செவிலியா் என 4 நிலைகளில் பணிபுரிந்து வருகிறோம்.

இதற்கிடையே மத்திய அரசின் நிதியுதவியோடு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 11 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். முறையான பணி விதிகள் உருவாக்கப்படாமல், இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். தற்காலிகப் பணியாளா்களான இவா்களுக்கு ‘சமுதாய சுகாதார அலுவலா்’ என பெயா் மாற்றம் செய்வது, பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் செவிலியா்களுக்கான பதவி உயா்வுகளையும், பணிக் கட்டமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும். மத்திய அரசு விதிகளுக்கும் இந்த நடைமுறை முரண்பட்டிருக்கிறது. இந்த பெயா் மாற்ற நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மூலமாக தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்படுகிறது என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.