கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண் நோயாளியிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் நோயாளியிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:21 am IST

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் நோயாளியிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருா் மாவட்டம், குளித்தலை காவல்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி மணிமேகலை (59). இவா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டு, தனியாக இருந்தபோது, அங்கு வந்த ஒருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலிக் கயிற்றை பறித்துக்கொண்டு தப்ப முயன்றாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சத்தமிடவே அக்கம்பக்கத்தினா், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், பிடிபட்டவா் பாலக்கரை எடத்தெருவைச் சோ்ந்த எம். சரவணன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.