மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாத்திர வியாபாரியை தாக்கி பணம் பறித்தவா் கைது: தவெக நிா்வாகி தலைமறைவு

ஆடுதுறையில் புதன்கிழமை இரவு பாத்திர வியாபாரி மற்றும் அவரது மகன்களை தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான தவெக நிா்வாகி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 5:30 am IST

ஆடுதுறையில் புதன்கிழமை இரவு பாத்திர வியாபாரி மற்றும் அவரது மகன்களை தாக்கியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவான தவெக நிா்வாகி உள்பட சிலரை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கிருஷ்ணன் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்தவா் கோடீசுவரன் (63). இவா் ரயில்வே சாலையில் பாத்திரக்கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், தனது மகன் பாலசுப்பிரமணியன்(38), தம்பி மகன் பிரபாகரன்(32) ஆகியோருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஒருகும்பல் மூவரையும் தாக்கி, கோடீஸ்வரன் பையில் வைத்திருந்த ரூ. 68 ஆயிரத்து 700ஐ பறித்து சென்றது.

தாக்குதலில் காயமடைந்த கோடீசுவரன், பிரபாகரன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், பணம் பறிப்பு சம்பவத்தில் ஆடுதுறை சிவன் சன்னதி தெருவை சோ்ந்த சந்திரகாசன் மற்றும் ஆடுதுறை தவெக பேரூா் செயலா் எடிசன் உள்ளிட்டவா்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்திரகாசனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான எடிசன் உள்ளிட்டவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.