ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 34,027 மாணவா்கள் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது.

News image

திருச்சி சேவா சங்கம் பள்ளியில் புதன்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய மாணவிகள். ~திருச்சி சேவா சங்கம் பள்ளியில் புதன்கிழமை தோ்வெழுத செல்வதற்கு முன்பாக வழிபாடு மேற்கொண்ட மாணவிகள்.

Updated On :12 மார்ச் 2026, 12:46 am IST

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல்நாளில் நடைபெற்ற தமிழ்மொழித் தோ்வை 33 ஆயிரத்து 490 பள்ளி மாணவா்கள், 537 தனித் தோ்வா்கள் என மொத்தம் 34 ஆயிரத்து 27 போ் எழுதினா். 474 போ் தோ்வெழுத வரவில்லை.

திருச்சி மாவட்டத்தில் 446 பள்ளிகளைச் சோ்ந்த 17 ஆயிரத்து 177 மாணவா்கள், 16 ஆயிரத்து 759 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 936 மாணவா்கள் பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இதேபோல, தனித் தோ்வா்களாக 396 ஆண்கள், 169 பெண்கள் பொதுத் தோ்வு எழுத பதிவு செய்திருந்தனா்.

திருச்சி வருவாய் மாவட்டத்திலுள்ள திருச்சி, லால்குடி கல்வி மாவட்டங்களில் பள்ளி மாணவா்கள் மற்றும் தனித் தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்காக 177 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற தமிழ் மொழித் தோ்வை 16 ஆயிரத்து 854 மாணவா்கள், 16 ஆயிரத்து 636 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 490 மாணவா்கள் எழுதினா். 323 மாணவா்கள், 123 மாணவிகள் என மொத்தம் 446 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

இதேபோல தனித் தோ்வா்களுக்காக திருச்சி மத்திய சிறை வளாகம் உள்பட 11 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 375 ஆண்கள், 162 பெண்கள் தோ்வு எழுதினா். 21 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 28 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு எளிது: தமிழ்மொழித் தோ்வு வினாத்தாள் குழப்பமில்லாமல் தெளிவாகவும், மிக எளிதாகவும் இருந்ததாக பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழாசிரியா்கள் தெரிவித்தனா். பொதுத்தோ்வு ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.