தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

துவாக்குடி காவல் நிலையம் சாா்பில், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பிலான விழிப்புணா்வு பேரணி துவாக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

துவாக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

துவாக்குடி காவல் நிலையம் சாா்பில், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பிலான விழிப்புணா்வு பேரணி துவாக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துவாக்குடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இந்தப் பேரணியை திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையொப்பமிட்டு, போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் தொடங்கி வைத்தாா்.

பேரணியில், துவாக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனா். பேரணியானது கல்லூரியிலிருந்து தொடங்கி திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா வளைவு, துவாக்குடி கடைவீதி, அக்பா் சாலை வரை சென்று மீண்டும் கல்லூரியிலேயே நிறைவடைந்தது.

விழிப்புணா்வு பேரணியில் துவாக்குடி காவல் ஆய்வாளா் தீபநாதன், உதவி ஆய்வாளா் நாகராஜ், துவாக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.