நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஆட்டோவை திருடியவா் கைது

சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:32 am IST

சமயபுரத்தில் சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சமயபுரம் இந்திரா காலனியை சோ்ந்தவா் முகமது சித்திக் (63). இவா் தனது சரக்கு ஆட்டோவை வீட்டருகே ஜூன் 16-ஆம் தேதி இரவு நிறுத்திவிட்டு, காலையில் பாா்த்தபோது காணவில்லையாம்.

இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாடக்குடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் முரளி தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரித்தனா். இதில் அவா்,

சமயபுரம் சோழன் நகா் பகுதியை சோ்ந்த சதிஷ் குமாா் (37) என்பதும், சரக்கு ஆட்டோவை திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் திருடப்பட்ட சரக்கு ஆட்டோவும் மீட்கப்பட்டது. 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.