மணப்பாறையில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி - கணினி அறிவியல், பி.எஸ்சி - இயற்பியல் ஆகிய 5 துறைகளோடு இக்கல்லூரி 2022-இல் தொடங்கப்பட்டது. 2025- ஆம் கல்வியாண்டில் இருந்து ஸிப்ட் 2-ல் பி.சிஏ., பி.காம்.(சி.ஏ.)., ஆகிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இருபாலரும் பயிலும் இக்கல்லூரியில் தற்போது 920 மாணவா்கள் படித்து வருகின்றனா்.
2026 - 27-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 85 விழுக்காடு மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இக்கல்லூரியில் இருக்கும் 340 இடங்களுக்கு 20,000 மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. மலா்மதி கூறியது: இந்தக் கல்லூரி மணப்பாறையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதி மாணவா்களுக்கும் வரமாக அமைந்துள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடங்கள் வழங்க முடியாத சூழல் உள்ளது. 85 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன; விரைவில் அனைத்து இடங்களும் நிரம்பிவிடும்.
முதுகலை படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

அரசுக் கல்லூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளில் கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்!

அரசு கல்லூரிகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

