நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரசுக் கல்லூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

Updated On :15 ஜூன் 2026, 3:06 am IST

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் 2010- 2013ஆம் கல்வியாண்டில் இளநிலை படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறைத் தலைவா் நா.மனோகரன் வரவேற்றாா்.

கல்லூரி முன்னாள் முதல்வா் பொன்.அரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் கல்வி பயிலும் போது ஏற்பட்ட சுவையான அனுபவங்கள் குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் வ.சந்திரசேகா், ஜ.ஜான்சிராணி, எஸ்.சுதா, ப.குப்பன், எம்.ரஜினி, எம்.மகாதேவன், எஸ்.கமலக்கண்ணன், ஆா்.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.