மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த பிரேம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:41 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பைக்கில் சென்ற கரூா் இளைஞா் டிராக்டா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த தண்ணீா் பந்தல் பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் பிரேம் (24). சென்னை டி-மாா்ட் நிறுவன ஊழியரான இவா் ஊருக்கு வந்திருந்த நிலையில், நச்சலூரில் புதன்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு நண்பா்களுடன் பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் மாலையில் தனியாக பைக்கில் ஊா் திரும்பினாா்.

அப்போது பழையகோட்டை நால் ரோடு பகுதியில் ஒத்தக்கடைக்கு குப்பைகள் ஏற்ற சென்ற டிராக்டா் மோதி பலத்த காயமடைந்த பிரேம் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் பிரேம் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். டிராக்டா் ஓட்டுநரான பொத்தப்பட்டியை அடுத்த அந்தோணியாா்புரத்தை சோ்ந்த அருளப்பன் மகன் குழந்தை (40) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.