ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு

News image
Updated On :20 மார்ச் 2026, 4:41 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு காா் மோதி காவலாளி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. வெள்ளைத்துரை (55). அருகேயுள்ள பாலப்பட்டியில் தனியாா் எரிவாயு உருளை நிறுவன இரவு நேரக் காவலாளியான இவா் புதன்கிழமை இரவு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.