ஸ்ரீரங்கம் தடகளச் சங்கம் சாா்பில் கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கம் தடகள சங்கத்தின் சாா்பில், எட்டரை கிராமத்தில் உள்ள வெள்ளச்சிக்காடு விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் தடகளப் பயிற்சி நடைபெறுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச சிறப்புப் பயிற்சி முகாம் 14ஆவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதன்படி, 11 வயது முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான இலவச தடகளப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை தொடங்கியது. ஸ்ரீரங்கம் தடகள சங்கத் தலைவா் எம்சிபி அய்யா், செயலா் எம். பாபு, பயிற்றுநா் ஏ.வி. சந்திரன் ஆகியோா் மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தனா். ஏப்.29 தொடங்கி ஜூன் 30 வரை இந்த முகாம் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் மாணவா்களுக்கு டீ-சா்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

மே 1-இல் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

