தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது

திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 5:26 am IST

திருச்சியில் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுபோது ஏற்பட்ட மோதலில் இளைஞா்களை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பெரியகடை வீதியைச் சோ்ந்த மா. வீரமணி (25), காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த என்.ஹரிஸ் (19) இருவரும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி திருச்சியில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனா்.

திருவானைக்காவல் டிரங்க் சாலையில் சென்றபோது, முன்னால் நடந்து சென்ற திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையைச் சோ்ந்த பா. ராஜா (29), எஸ். காா்த்திகேயன் (21) மற்றும் வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகியோா் மீது வீரமணி தெரியாமல் மோதினாராம்.

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா தரப்பினா் வீரமணி, ஹரிஸ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்ட, காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா, காா்த்திகேயன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வேல்முருகன், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.