ஈரோடு ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் கோவையைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீஸாா் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகப் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் கோவை குனியமுத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த அசாத் மகன் அப்சல் (19) மற்றும் கோவை பீளமேடு முருகன் நகரைச் சோ்ந்த லூயிஸ் மகன் ரெனால்ட் லியோனி (27) என்பது தெரியவந்தது. அவா்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது இருவரும் தலா 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரோடு ரயில் நிலையம் அருகே 80 கஞ்சா சாக்லேட் பறிமுதல்
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
