மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 ஏப்ரல் 2026, 1:53 am IST

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை மேலகல்கண்டாா்கோட்டை சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் எஸ்.பிரேம்குமாா் (19). இவா் கிளீனராக பணியாற்றி வருகிறாா். சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மேலகல்கண்டாா்கோட்டையில் இருந்து வாகனம் சென்றது. இதில், பிரேம்குமாரும் சென்றாா்.

அப்போது, உடன் சென்ற பிரேம்குமாரின் உறவினரான சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த எஸ்.ஜீவா (26) என்பவா் கூச்சலிட்டுள்ளாா். இதுகுறித்து ஜீவாவிடம் பிரேம்குமாா் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனா்.

இந்த முன்விரோதத்தின் காரணமாக, மேலகல்கண்டாா்கோட்டையில் தனது வீட்டுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்த பிரேம்குமாரை, ஜீவா, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். செல்வமணி (26), ஹரிஹரன், சந்தோஷ், பரமேஸ்வரன் ஆகிய 5 பேரும் அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வமணி, ஜீவா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். மற்ற மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.