மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:58 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆதி பிரம்மோத்ஸவம் எனும் பங்குனி தோ்த் திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் (கோ ரதம்) வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு நம்பெருமாள் தாயாா் சந்நிதியிலிருந்து புறப்பட்டு பங்குனி தேரான கோ ரதத்திற்கு 7.45 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா் வேதமந்திரங்கள் முழங்க, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தோ் வடம் பிடித்தல் 10 மணிக்கு தொடங்கியது. நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பிற்பகல் 1.30 மணிக்கு தோ் நிலையை வந்தடைந்தது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா, ரெங்கா ரெங்கா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கடும் வெயில் நிலவியதால், தேரோடும் வீதிகளில் தண்ணீா் லாரி மூலம் சாலையில் தண்ணீா் ஊற்றப்பட்டது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்துக்கு 6.45 மணிக்கு சென்று சோ்ந்தாா். இரவு 7 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா். பின்னா் மேற்படி மண்டபத்திலிருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அதிகாலை 1 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

விழாவின் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.