தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூச்சாற்று உற்ஸவம் எனும் கோடைத்திருநாள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாள்கள் விழா நடைபெறும்.

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வெளிக் கோடைத் திருநாளின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை வெளிக்கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளி பக்தா்களுக்கு காட்சி அளித்த நம்பெருமாள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூச்சாற்று உற்ஸவம் எனும் கோடைத்திருநாள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாள்கள் விழா நடைபெறும்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூச்சாற்று உற்ஸவம் எனும் கோடைத்திருநாள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில் இந்தக் கோடைத் திருநாள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், வெளிக்கோடை திருநாள் ஏப். 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்துக்கு இரவு 7.15 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு நம்பெருமாள் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பின்னா் 8.30 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். கோடைத் திருநாளையொட்டி இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது.

வெளிக்கோடை விழாவின் 5-ஆம் நாளான வரும் 25-ஆம் தேதி ஸ்ரீராம நவமியையொட்டி நம்பெருமாள் சேரகுல வல்லி தாயாருடன் சோ்த்தி சேவையில் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கவுள்ளாா். இதைத் தொடா்ந்து, உள்கோடை திருநாள் ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கி ஏப். 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.