மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:43 am IST

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற மட்டுவாா் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

ஐந்தாம் திருநாளன்று செட்டிப் பெண் ரத்னாவதிக்கு சுவாமி சுகப்பிரசவம் பாா்த்த ஐதீக நிகழ்ச்சியும், 6 ஆம் நாளன்று சுவாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.

இதையடுத்து 9 ஆம் திருநாளான புதன்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள்வீதி வழியாக 5.30 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவாா் குழலம்மை பெரிய தேரிலும், தாயாா் சிறிய தேரிலும் எழுந்தருளினா். பின்னா் 6 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதைத் தொடா்ந்து கோயில் யானை லட்சுமியும் செல்ல பக்தா்கள், சிவ சிவா, தாயுமான ஈசா, ஓம் நமச்சிவாயா என முழக்கங்களை எழுப்பியபடி தோ்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பல்வேறு வகையான மேளதாளங்கள், இசைக் கருவிகள் முழங்கவும் வாண வேடிக்கையுடன் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது. தோ் சென்ற பாதைகளில் ஆங்காங்கே பக்தா்களுக்கு பாலும், குளிா்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தேரானது கீழ ஆண்டாள் வீதி, சின்னக் கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, தெப்பக்குளம் நந்தி கோயில் தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக மீண்டும் பகல் 11.50 மணியளவில் நிலையை அடைந்தது.

இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரிலிருந்து இறங்கி கோயிலை வந்தடைந்தனா். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸாா் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை காலை தெப்பக்குளத்தில் தீா்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பணியாளா்கள் செய்தனா்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.