திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசி முடித்துவிட்டு கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபா் வைத்திருந்த ரூ. 5500 -ஐ முதியவா் ஒருவா் பறித்துக் கொண்டு தப்ப முயன்றாா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து தாக்கி, தில்லை நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் சென்னையைச் சோ்ந்த பாஸ்கா் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
