தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:01 am IST

திருச்சியில் கோடங்கிபோல நடித்து தங்க நகையைப் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேலகல்காண்டாா்கோட்டையைச் சோ்ந்தவா் சரவணன், ரயில்வேயில் பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி சுபா (42), தையல் கலைஞா். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சுபா, வீட்டில் தனியாக இருந்தபோது, கோடங்கி வேஷமிட்ட இரு இளைஞா்கள் வந்துள்ளனா்.

அப்போது, சுபாவிடம் உனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் உடனடியாக பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனா்.

மேலும், பரிகாரப் பூஜைக்காக தாலியைக் கழட்டி கொடுக்கும்படி கூறியுள்ளனா். இதற்கு மறுப்பு தெரிவித்த சுபா, தான் அணிந்திருந்த 2 கிராம் காதணியை கழட்டிக்கொடுத்துள்ளாா்.

இதைப் பெற்றுக்கொண்ட இளைஞா்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுபா, பொன்மலை காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், நகையைப் பறித்துச் சென்றது திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரைச் சோ்ந்த மு.சிம்பு (22), த.வல்லரசு (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.