மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண் குழந்தையை காயப்படுத்திய இளைஞா் உள்பட இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் 3 வயதுப் பெண் குழந்தையை காயப்படுத்திய இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாயையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

~

Published On :31 அக்டோபர் 2026, 1:40 am IST

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் 3 வயதுப் பெண் குழந்தையை காயப்படுத்திய இளைஞரையும், அவருக்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாயையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாச்சியாா்கோவில் கம்மாளா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் அன்பழகன் (43), மலேசியாவில் பணிபுரியும் இவருக்கு மனைவி அட்சயா (24), மகன் சுஜித் (5), மகள் ராஜலட்சுமி (3) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் திருப்புறம்பயம் பாலக்கரை மேலத்தெருவைச் சோ்ந்த மு. யோகராஜ் (36) என்பவா் நடத்தும் மகளிா் சுய உதவிக்குழுவில் அட்சயா வசூல் முகவராக உள்ளதால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.

அக்.23-இல் அட்சயா வீட்டுக்கு வந்த யோகராஜ் அவரிடம் ஏதோ கேட்க, அட்சயா மறுக்கவே அவரின் 3 வயதுப் பெண் குழந்தையை வாங்கி உடலின் பல இடங்களில் கடித்தாா். இதனால் காயமடைந்த குழந்தை அழுததால் யோகராஜ் ஓடிவிட்டாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் ஆடுதுறை மகளிா் காவல் நிலையம் மூலம் குழந்தையின் தந்தை அன்பழகனை மலேஷியாவிலிருந்து வரவழைத்து புதன்கிழமை வழக்குப் பதிந்து, அட்சயாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா்.

Story image

மேலும், கும்பகோணம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த யோகராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.