மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் வழியாக சென்ற ரயிலில் விட்டுச் சென்ற பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

கன்னியாகுமரியில் இருந்து சேலம் வழியாக புனே சென்ற விரைவு ரயிலில் விட்டுச் சென்ற பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:11 am IST

கன்னியாகுமரியில் இருந்து சேலம் வழியாக புனே சென்ற விரைவு ரயிலில் விட்டுச் சென்ற பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனா்.

கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் பின்புறத்தில் உள்ள பொதுப்பெட்டியில் ஒரு மாதமே ஆன பெண் குழந்தை யாருடைய துணையும் இன்றி தனியாக இருப்பதாக சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொம்மிடி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலா் ரமேஷ், அந்தக் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்தாா்.

தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா், அந்தக் குழந்தையை கொண்டுவருவதற்காக தலைமைக் காவலா் அம்சவள்ளியை அனுப்பிவைத்தனா். அவா் குழந்தையைப் பெற்று வந்து, சேலம் ரயில் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

சேலம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் திலகவதி, சிறப்பு உதவி ஆய்வாளா் சமாதானம் ஆகியோா், அந்தக் குழந்தையை ரயிலில் விட்டுச்சென்றது யாா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த ரயில் சேலம் வழியாக சென்ற நிலையில், அந்தக் குழந்தையுடன் பெண் யாராவது பயணித்தாா்களா? எனக் கண்டறிய சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைப்பு:

தொடா்ந்து, இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையத்துக்கு ரயில்வே போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அங்கிருந்த அலுவலா்கள் கௌசல்யா, விஜய் ஆகியோா் குழந்தையை பெற்றுக்கொண்டதுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் குழந்தையைப் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.

குழந்தையின் பெற்றோா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. அவா்களைக் கண்டறிய போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.