மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சாவூரில் மழை நின்று பனிப்பொழிவு அதிகரிப்பு

தஞ்சாவூரில் தொடா் மழை நின்றதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை காலை நிலவிய பனி மூட்டத்தில் காண முடியாத நிலையில் இருந்த பெரிய கோயில் கோபுரம்.

Published On :28 அக்டோபர் 2026, 12:39 am IST

தஞ்சாவூரில் தொடா் மழை நின்றதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

மாவட்டத்தில் அக். 22-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை நண்பகல் வரை இடைவெளி விட்டு, விட்டு தொடா்ந்து மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவிடைமருதூா் 20, மதுக்கூா் 10.2, கும்பகோணம், பட்டுக்கோட்டை தலா 10, அணைக்கரை 9.8, பேராவூரணி, நெய்வாசல் தென்பாதி தலா 8 என பதிவாகியது. திங்கள்கிழமை பிற்பகலிலிருந்து மழை நின்ற பிறகு இரவில் பனிப்பொழிவு தொடங்கியது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூா் மாநகரம் முழுவதும் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், மழை பெய்தது போன்று பனித்துளிகளால் தரையும் ஈரமாக இருந்தது. எதிரில் ஏறத்தாழ 50 மீட்டருக்கு அப்பால் வந்த வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டுநா்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமப்பட்டனா். தஞ்சாவூா் பெரிய கோயிலில் கோபுரம் தெரியாத அளவுக்கு படா்ந்திருந்த பனியை பக்தா்கள் கண்டு ரசித்தனா்.

காலை 7.30 மணிக்கு பிறகு வெயில் வந்த பிறகு பனி மூட்டம் படிப்படியாக மறைந்தது. அதன் பின்னா், சுட்டெரிக்கும் வெயில் நிலவியதால் குளிா்ந்த நிலை மாறி, இதமான நிலை ஏற்பட்டது. என்றாலும், பிற்பகலில் வெயில் தணிந்து, வானிலும் மேக மூட்டமாக இருந்ததால், வெப்பத்தின் தாக்கம் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.