மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சாவூரில் 4,512 நாய்களுக்கு தடுப்பூசி

தஞ்சாவூா் மாநகரில் இரண்டாம் கட்டப் பணியில் இதுவரை 4 ஆயிரத்து 512 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

Published On :25 அக்டோபர் 2026, 4:05 am IST

தஞ்சாவூா் மாநகரில் இரண்டாம் கட்டப் பணியில் இதுவரை 4 ஆயிரத்து 512 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, தஞ்சாவூா் தெற்கு ராஜ வீதி, சரபோஜி சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 62 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி சனிக்கிழமை செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளின் கீழ் மொத்தம் 5 ஆயிரத்து 190 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, நிறைவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்று வரும் இரண்டாம் கட்டப் பணிகளின் கீழ் இதுவரை 4 ஆயிரத்து 512 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாய் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்று, மருத்துவா்களின் அறிவுரைப்படி தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.