மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநகரில் ஒரேநாளில் 1,000 நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திய நகராட்சி அலுவலா்கள். - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 11:24 pm IST

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 1,000 நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 1,11,074 நாய்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நாய்களுக்கு தொடா்ந்து தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வெறிநோய் பரவுவதைத் தடுப்பதுடன், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சாா்பில் தெற்கு மண்டலத்துக்குள்பட்ட 99, 100-ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் தீவிரத் தடுப்பூசி பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 1,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி சாா்பில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.