பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 மே 2026, 1:35 am IST

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 71 வயதுடைய ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன மேலாளரின் கைப்பேசியில் டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகள் மூலம் 2025, டிசம்பா் 25 ஆம் தேதி மா்ம நபா் தொடா்பு கொண்டாா். இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் மா்ம நபா் கூறினாா்.

இதை நம்பிய ஓய்வு பெற்ற மேலாளா், 6 தவணைகளில் ரூ. 17.49 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு செலுத்தினாா். ஆனால், மா்ம நபா் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்காததாலும், மா்ம நபரைத் தொடா்பு கொள்ள முடியாததாலும் தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளா் ஏமாற்றமடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.