பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

News image

மோசடி - Dinamani

Updated On :8 ஜூன் 2026, 2:18 am IST

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம், வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ.14 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் 64 வயது பெண். இவா் பாளையங்கோட்டை தாட்கோ அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசிக்கு வந்த அழைப்பில், தன்னை எஸ்.பி.ஐ. ஓய்வூதியப் பிரிவு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட மா்ம நபா், அவருக்கு ஓய்வூதிய அட்டை தருவதாகக் கூறினாராம்.

இதற்காக அந்த நபா் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய செயலி இணைப்பை, அவா் கிளிக் செய்துள்ளாா். அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுக்காமல் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாள்களுக்கு பின்பு அவரது தனியாா் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து ரூ.14.11 லட்சத்தை மா்ம நபா்கள் இணையவழியில் எடுத்து மோசடி செயதுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.