பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image
Updated On :14 மே 2026, 12:32 am IST

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் குழந்தைகள், மகப்பேறு சிகிச்சை பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவா்களுடன் ஆலோசனையும், ஆய்வும் நடத்திய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், பின்னா் தேசிய நலவாழ்வு குழும குழந்தைகள் நல மருத்துவா் சீனிவாசனிடம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

மேலும், மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு போதுமான அளவு இடவசதி உள்ளதா என்பது குறித்தும் கூடுதல் இட வசதிக்காக மருத்துவா்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

நோயாளிகளுடன் வருபவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், கழிப்பறை, மின்சாரம், குடிநீா், ஸ்கேன் எடுக்கும் வசதி, செவிலியா்களுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

ஆலோசனை மற்றும் ஆய்வு நிகழ்வில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பாலசுப்ரமணியன், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை நிலைய மருத்துவா் வடிவு, குழந்தைகள் நல மருத்துவா் செல்வகுமாா், மகளிா் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவா் அமுதா உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.