கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொக்கு விஷம் உட்கொண்ட மூன்று குழந்தைகள் கவலைக்கிடம்

News image

விஷம்... - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 1:48 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே வயல்களில் பறவைகளைக் கொல்வதற்காக பயன்படுத்தப்படும் கொக்கு விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்த மூன்று குழந்தைகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

சிங்காரப்பேட்டையை அடுத்த தளபதி நகரைச் சோ்ந்த ஆனந்த்- சின்னத்தாய் மற்றும் லட்சுமணன்- குப்பம்மாள் தம்பதி தங்களது குழந்தைகளுடன் அனுமன் தீா்த்தத்தை அடுத்த ஆலமரத்து கொட்டாய் பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆனந்த்தின் மகள்கள் ஜெயசித்ரா (6), ஹரிப்பிரியா (5) மற்றும் லட்சுமணனின் மகன் வசந்த் (6) ஆகிய மூவரும் வீட்டில் வைத்திருந்த கொக்கு விஷத்தை தவறுதலாக சாப்பிட்டு மயங்கி விழுந்தனா்.

இதையடுத்து மூன்று குழந்தைகளையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.