தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:08 am IST

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மூங்கில் பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா். அதில் இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில், அவா்கள் ஜெயங்கொண்டம் அங்கராயநல்லூா் வடக்கு காலனியைச் சோ்ந்த கலைத் தென்றல் (21), மற்ற இருவரும் கும்பகோணத்தை சோ்ந்த 17 வயது சிறாா்கள் என்பதும், கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.