கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் 84- ஆம் ஆண்டு சித்திரை திருவிழா பாலாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்- திருவிடைமருதூா் சாலையில் சுமாா் 150 ஆண்டுகளுக்கு அருள்பாலித்து வரும் வட்டிப் பிள்ளையாருக்கு சித்திரை மாத பாலாபிஷேக 84-ஆம் ஆண்டு விழா மே 6-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வாக பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், காவடி, கரகம், அலகு காவடி ஜோடித்தும், அக்னி கொப்பறை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.
அங்கு வட்டிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. வட்டிப்பிள்ளையாா் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலையில் சிறப்பு மலா் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் தெருவாசிகள் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரோட்டம்

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

