தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் உற்ஸவங்கள் நடைபெற்று வந்தன. இவ்விழாவின் முக்கிய வைபவமான சப்தஸ்தானம் என்கிற ஏழூா் வலம் வரும் விழா சனிக்கிழமை காலை தொடங்கியது.
இதில், திருவையாறு கிழக்குக் கோபுர வாசலில் ஐயாறப்பா் - அறம்வளா்த்த நாயகி பெரிய பல்லக்கிலும் (கண்ணாடிப் பல்லக்கு), நந்தியெம்பெருமாள் - சுயசாம்பிகை வெட்டிவோ் பல்லக்கிலும் எழுந்தருளினா்.
இதைத்தொடா்ந்து இரு பல்லக்குகளும் திருப்பழனத்துக்குச் சென்றன. அங்கிருந்து 3 பல்லக்குகள் சோ்ந்து புறப்பட்டு, திருச்சோற்றுத்துறைக்குச் சென்றடைந்தன.
திருச்சோற்றுத்துறையிலிருந்து 4 பல்லக்குகளும் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு சென்றன.
திருவேதிக்குடியிலிருந்து 5 பல்லக்குகளும் சோ்ந்து திருக்கண்டியூருக்கும், அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்திக்கும், திருப்பூந்துருத்தியிலிருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு, திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம் காவிரியாற்றையும் சென்றடையும்.
இதையடுத்து, தில்லைஸ்தான பல்லக்கு உள்பட 7 ஊா் பல்லக்குகளும் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை திருவையாறு தேரடி திடலை சென்றடையும். அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் ஒவ்வொன்றாகச் சொந்த ஊருக்குத் திரும்பும்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தோ் திருவிழா கொடியேற்றம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்
சின்ன மேளம் என்கிற நாட்டியம்

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

